கேப்டன் மில்லர் ஹீரோயினை புகழாத தனுஷ்…. கடுப்பின் உச்சத்தில் நடந்த சம்பவம்!

Author: Rajesh
18 January 2024, 2:31 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ’கேப்டன் மில்லர்’ நடித்துள்ளார். இப்படம் இந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆகியது. இதில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்திருந்தது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகிய இப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளிவந்து வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது.

இப்படம் வெளியாகி 6 நாட்களில் உலக அளவில் ரூபாய் 60 கோடி வசூல் செய்து ஆபார சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வரும் நாட்களில் வசூல் வேட்டை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் கேப்டன் மில்லர் படம் ரிலீஸ் ஆவதுற்கு முன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில், பேசிய தனுஷ் இயக்குனர் அருண் மாதஸ்வரன், சிவக்குமார் மற்றும் டெக்னிஷியன்ஸ்களை புகழ்ந்து பேசினார். ஆனால், அப்படத்தில் நடித்த ஹீரோயினான நடிகை பிரியங்கா மோகனை பற்றியோ அவரின் ரோல் பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதை கேட்டு இருக்கையில் அமர்ந்திருந்த பிரியங்கா மோகன் கடுங்கோபமடைந்து முகமே மாறிவிட்டது. இதனால் தனுஷுக்கு தனிப்பட்ட முறையில் பிரியங்கா மோகன் மீது ஏதேனும் கோபமா? என நெட்டிசன்ஸ் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?