தனுஷ் விவாகரத்தே பண்ணல – ஒரு வருடம் கழித்து சேர்ந்து வாழ்வார்கள் – ரகசியத்தை உடைத்த பிரபலம்!
Author: Shree8 April 2023, 9:55 pm
நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் 17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் சென்ற வருடம் திடீரென தாங்கள் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாக கூறினார்கள். அதன் பின்னர் இருவரும் தங்களது கெரியரில் வெறித்தனமாக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இதனிடையே தனுஷ் 150 கோடியில் புதிய வீட்டை வாங்கினார். அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யாவும் புதிய படங்கள் இயக்கும் வேளைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். இப்படி இவர்கள் இருவரும் ஏதோ வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற லட்சியத்தில் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான நேரத்தில் தனுஷ் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி சொல்கிறோம் கேளுங்கள், அ தாவது தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யவே இல்லையாம். தனியாக வாழப்போகிறோம் என்று தான் இருவருமே கூறினார்களே தவிர விவாரத்துக்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை. ஓரிரு வருடங்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்களாம்.
தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டியதன் நோக்கமே அப்பாவும் மகளும் பக்கத்தில் இருக்க தான் நினைத்து தான் அந்த நிலத்தை வாங்கினாராம். பின்னர் கிரஹபிரவேசம் நடந்த போது, ரஜினியின் 80வது பிறந்தநாளுக்காக ரஜினியுடன், ஐஸ்வர்யா மற்றும் மகன்கள் சென்றுவிட்டார்கள்.அதே நாளில் கிரஹபிரவேசம் நடந்ததால் தான் அவர்களால் வரமுடியவில்லை என தனுஷுக்கு நெருக்கமாக இருக்கும் இயக்குனர் சுப்ரமணிய சிவா தன்னிடம் கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.