இம்மாம்பெரிய பங்களா இருந்தும் குடும்பம் நடத்த மனைவி இல்லையே… ஐஸ்வர்யா பிரிவால் வாடும் தனுஷ்!

Author: Shree
15 September 2023, 6:54 pm

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தனுஷ்சை பிரிந்த பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து சிறப்பு தோற்றத்தில் நடித்துவரும் லால்சலாம் படத்தினை இயக்கி வரும் நிலையில், ஐஸ்வர்யா தனுசை பிரிந்து ஒரு வருடமான நிலையில், அவரவர் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

இதனிடையே தனுஷ் ரூ. 150 கோடியில் பிரம்மாண்ட பங்களா ஒன்றை கட்டி குடிபெயர்ந்தார். இதனால் தனுஷ் மனைவியை பிரிந்த பின் தனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார் என நாம் எல்லோரும் நினைத்திருந்தோம். ஆனால், அப்படி இல்லையாம். ஆம், அவ்வப்போது தனுஷ் தன் மனைவி உடன் இல்லாததை நினைத்து தனிமையில் இருப்பது போல் உணர்கிறாராம். இதனால் அவ்வப்போது மகன்களை சந்திக்க சாக்கு போக்கு சொல்லி ஐஸ்வர்யாவை பார்க்க காரணம் தேடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருந்தாலும் உறுதிப்படுத்தாத இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 327

    0

    0