விபச்சார தொழில்… கதறி அழுத சினேகாவை கட்டாயப்படுத்திய தனுஷ்!

Author: Rajesh
1 February 2024, 12:10 pm

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் சினேகா நடித்து கடந்த 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. இத்திரைப்படத்தில் சினேகா,சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்திருந்தனர். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த இத்திரைப்படத்தில் தனுஷின் நடிப்பு இன்று வரை பாராட்டப்பட்டு வருகிறது.

கொக்கி குமார் கேரக்டரில் தனுஷ் மிரட்டியெடுத்திருப்பார். குறிப்பாக இப்படத்தில் தனுஷின் காதலியாக சினேகா விலைமாதுவாக நடித்திருப்பார். உலகளவில் 250 திரைகளில் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் அப்போவே ரூ. 3 கோடி வரை வசூலித்தது. இந்த படம் வெளியான சமயத்தில் சினேகாவின் ரோல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தேபோதே சினேகா இது போன்ற ரோலில் நடித்து பெயர் கெடுத்துக்கொள்ளப்போகிறேன். மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ? தெரியாமல் இந்த படத்தில் கமிட் ஆகிவிட்டேனே என புலம்பி அழுதாராம். அப்போது தனுஷ் தான், இந்த படத்தில் உங்களது ரோல் அழுத்தமானதாக மிகப்பெரிய அளவில் பேசப்படும் என ஆறுதல் கூறி மீண்டும் நடிக்க வைத்தாராம். அவர் கூறியது போலவே சினேகாவின் ரோல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடதக்கது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?