9 வருடங்களாக நயன்தாராவை பழிவாங்கும் தனுஷ்…. பிரச்சனையின் பின்னணி இது தான்!

Author:
16 November 2024, 2:25 pm

நயன்தாரா தனுஷ் மீது குற்றசாட்டு:

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக இருந்து வரும் நடிகை நயன்தாரா தற்போது நடிகர் தனுஷ் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டை முன் வைத்து மூன்று பக்க குற்றச்சாட்டு பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் .

அந்த பதிவில் நயன்தாரா கூறி இருப்பதாவது… நானும் விக்னேஷ் சிவனும் இணைந்து திருமண எங்களுடைய திருமண டாகுமெண்டரி நெட்பிளிக்ஸில் வெளியிட முடிவு செய்தோம். ஆனால், இந்த திருமண வீடியோ வெளியிடக்கூடாது என்பதில் நடிகர் தனுஷ் மறைமுகமாக எங்களுக்கு பல விதமான டார்ச்சர் மற்றும் தொல்லைகள் கொடுத்து தொடர்ந்து அதை வெளியிடாத வண்ணம் செய்து வந்தார்.

பிரச்சனைக்கு காரணம்:

கடந்த இரண்டு வருடங்களாக இதற்காக நாங்கள் போராடி வருகிறோம் என நயன்தாரா அந்த நீண்ட பதிவில் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் இவர்களின் பிரச்சனை என்ன? ஏன் தனுஷ் நயன்தாராவை இந்த அளவுக்கு பழி வாங்குகிறார்.

அதற்கான என்ன காரணம் என்பது குறித்து விசாரித்ததில் தற்போது ஒரு தகவல் தெரிய வந்திருக்கிறது. அதாவது 9 வருடங்களாக கிட்டத்தட்ட நயன்தாராவை தொடர்ச்சியாக நடிகர் தனுஷ் பழிவாங்கி வருவதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்று கேட்டீர்கள் ஆனால் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நடித்தார்.

விக்னேஷ் சிவனை காதலித்த நயன் – கடுப்பான தனுஷ்:

அவருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் நடிகர் தனுஷ் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தை தயாரிக்க ஒப்பந்தமாகி தொடர்ந்து தயாரித்து வந்தார். இதனிடையே திடீரென விக்னேஷ் நயன்தாராவும் காதலிக்கிறார்கள் என தெரிந்த உடனேயே நீங்கள் காதலிப்பதற்காக எல்லாம் நான் பணம் போட்டு படத்த எடுக்க முடியாது என கடுப்பாகி நேரடியாகவே கூறிவிட்டு அந்த படத்தை தயாரிப்பதில் இருந்து விலகிவிட்டார்.

இதனால் படம் பாதியிலேயே கை விடப்படும் என்ற ஒரு பயத்தில் நயன்தாரா தன் கை காசு மொத்தத்தையும் போட்டு அந்த படத்தை எப்படியாவது முடித்து வெளியிட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் படத்தை எடுத்து வெளியிட்டார்கள். படமும் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது அதன் பிறகு நயன்தாரா நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிப்பதையே தவிர்த்து விட்டார்.

9 வருடமாக பழிவாங்கும் தனுஷ்:

இதன் மூலம் இருவருக்கும் பகை பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து மகாராஜா படத்தின் டைரக்டர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிக்க நயன்தாரா கமிட் ஆகியிருக்கிறார். ஆனால், நயன்தாரா அந்த திரைப்படத்தில் நடிக்க கூடாது என தனுஷ் உடனடியாக இயக்குனர் நித்திலனை அழைத்து ஒரு கதை கேட்டு ஓகே பண்ணிவிட்டார்.

ஆனால், எப்போது நடித்துக் கொடுப்பேன் என்பதை தனுஷ் சொல்லவே இல்லை. எனவே தனுஷ் படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு நயன்தாரா படத்தை எடுக்கலாம் எனக் நித்திலன் பிளான் போட்டு இருக்கிறார் இப்படியாக நயன்தாராவை வளரவும் விடாமல் தொடர்ந்து தனுஷ் அவரது வாழ்க்கையில் பிரச்சனை செய்து வந்திருக்கிறார்.

இந்த பிரச்சனை தொடர்ந்து 9 வருடங்களாக நீடித்து வந்த நிலையில் தற்போது நயன்தாராவின் திருமண வீடியோவை வெளியிடுவதிலும் தனுஷ் மறைமுகமாக இருந்து அவர்களுக்கு டார்ச்சர் கொடுத்து அந்த வீடியோவை வெளியிடாத வண்ணம் செய்து வந்திருக்கிறார்.அதைத்தான் தற்போது நயன்தாரா பகிரங்கமாக வெளிப்படையாக அறிக்கையாக வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார். இந்த விவகாரத்தில் நயன்தாராவுக்கு பலரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

  • Mohanlal Empuraan Controversy பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!
  • Close menu