பிரபல நடிகையுடன் அப்பார்ட்மென்டில் தனுஷ்… கையும் களவுமாக பிடித்து டோஸ் விட்ட ரஜினி!

Author: Shree
20 June 2023, 4:23 pm

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். இவரது மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. 2006ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்தார்.

தற்போது இருவரும் தனித்தனியே பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் விவாகரத்து செய்யவில்லை. இவர்கள் பிரிவுக்கு காரணம் தனுஷ் பல்வேறு நடிகைகளுடன் தகாத உறவில் இருந்தது தான் என கூறப்படுகிறது. அந்த விஷயங்களை கண்டும் காணாமல் இருந்தவரைக்கும் பிரச்சனை இரு குடும்பத்தினருக்கு மட்டும் தெரியும். ஆனால் அவரை கண்டித்து எச்சரித்ததால் மனைவியே வேண்டாம் என பிரிந்துவிட்டார்.

குறிப்பாக இவர்களின் விவாகரத்துக்கு நடிகை அமலா பால் தான் காரணமாம் VIP படத்தில் நடித்தபோது தனுஷை வீட்டிற்கே அனுப்பாமல் தனியாக வீடு எடுத்து இருவரும் ஜாலி பண்ணியதாக செய்திகள் கூறுகிறது. இதை அறிந்து ஐஸ்வர்யா மிகவும் வேதனை பட்டாராம். மகளின் நிலையை பார்த்து வருந்திய ரஜினி கடுங்கோபத்தோடு தனுஷ் – அமலா பால் தங்கியிருந்த அப்பார்ட்மெண்டிற்கு சென்று கையும் களவுமாக பிடித்து அமலா பாலுக்கு செம டோஸ் விட்டாராம். ஆனால், அவரோ நடத்தை சரியில்லாத உங்கள் மருமகனை அடக்கிவையுங்கள் என திமிராக பேசினாராம். இதனால் அங்கு பெரிய பிரச்சனையே வெடித்ததாம். அது தான் தனுஷ் மனைவியை பிரிய காரணமாக இருந்ததாக தற்போது ஒரு செய்தி உலா வந்துக்கொண்டிருக்கிறது.

  • Impact of PART2 MOVIES on Theater Ownersஇனி பார்ட்-2 படமே வேண்டாம்…கதி கலங்கிய தியேட்டர் ஓனர்கள்..!
  • Views: - 647

    1

    0