“இட்லிக்கடை”படத்தின் தனுஷ் கெட்டப் கவனிச்சீங்களா…வைரலாகும் புகைப்படம்..!
Author: Selvan1 December 2024, 8:06 pm
மீண்டும் இளமை தோற்றத்தில் தனுஷ்
தனுஷ் நடிப்பது மட்டுமல்லாமல் இயக்குனர்,தயாரிப்பாளர்,பாடலாசிரியர் என பல அவதாரங்களை எடுத்து தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார்.இவர் தற்போது தன்னுடைய இட்லிக்கடை திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
இதற்கு முன்பாக ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்து ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றார்.இப்படத்தில் தனுஷ் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார்.
இவர் முதன் முதலில் இவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்தார்.அப்படத்தில் தனுஷ் மீசை இல்லாமல் அப்பாவி போன்ற தோற்றத்தில் இருப்பார்.
இதையும் படியுங்க: நடிகர் அல்லு அர்ஜுன் மீது புகார்..ரசிகர்களால் வந்த வினை…!
அதனையடுத்து இவர் அடுத்தடுத்து புது புது கதையம்சங்களை தேர்ந்தெடுத்து தன்னுடைய நடிப்பால் அசுர வளர்ச்சியை பெற்றார்.என்ன தான் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் கோட்டை விட்டாலும் சினிமாவில் இவர்க்கு நிகர் இவரே என்ற பாதையில் பயணித்து வருகிறார்.
தற்போது இவருடைய இட்லி கடை படத்தின் ஷூட்டிங் பகுதியில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை சந்தோசப்படுத்தியுள்ளது.தன்னுடைய முதல் படம் போல மீசை இல்லாமல் இளமையான தோற்றத்தில் இருப்பது போல் இருக்கிறார்.
#IdlyKadai New Look of #Dhanush🤩🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) November 30, 2024
Young clean shave look👌 pic.twitter.com/1nK6nO4k0E
இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நித்யாமேனன் நடிக்கிறார்.ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைக்கிறார்.இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.