லியோ படத்தில் தனுஷ்…. சீக்ரெட்டை உடைத்த லோகேஷ் : தாடி வளர்த்ததே அதுக்காகத்தானா?
Author: Udayachandran RadhaKrishnan10 April 2023, 2:31 pm
தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ச்சியாக ஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார்.
ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காஷ்மீரை தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இப்படத்தில் கேமியோ ரோலில் யார் நடிக்க இருக்கிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உலாவி வரும் நிலையில் இப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவர் 15 நாட்கள் கால் சீட் கொடுத்திருப்பதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறது.
மேலும் விக்ரம் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் சூர்யாவுக்கு எப்படி ஒரு வரவேற்பை கொடுத்ததோ அதை மிஞ்சும் அளவுக்கு ஒரு கேரக்டர் தான் இப்படத்தில் தனுஷுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டு வருவதால் இந்த அட்டகாசமான தகவலின் உறுதியான அப்டேட்ற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.