ஐஸ்வர்யாவுடன் இணையும் முடிவில் தனுஷ்..? அவரது மனமாற்றத்திற்கு அந்த நடிகர் காரணமா.?

Author: Rajesh
26 January 2022, 6:20 pm

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனது திறமையால் தடம் பதித்துள்ளார் தனுஷ். சமீபத்தில் இந்தியில் அவர் நடித்த அட்ராங்கி ரே திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் தமிழிலும் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியானது. தொடர்ந்து நடிகர் தனுஷ், மாறன், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.  இதனிடையே அடுத்து பாலிவுட் படங்களில் நடிப்பது குறித்த பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனுஷும் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழப்போவதாக சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டனர். அவர்களின் இந்த முடிவு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

சினிமா தொழிலில் தனுஷுக்கும் சிம்புவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே கடும் போட்டி இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்புவும், நடிகர் தனுஷுக்கு விவாகரத்து விஷயத்தில் அட்வைஸ் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷை போனில் தொடர்பு கொண்டு விவாகரத்து முடிவை கைவிடும்படி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. சிம்புவின் அறிவுரையை கேட்ட தனுஷ் மனம் மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 4004

    45

    14