கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனது திறமையால் தடம் பதித்துள்ளார் தனுஷ். சமீபத்தில் இந்தியில் அவர் நடித்த அட்ராங்கி ரே திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் தமிழிலும் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியானது. தொடர்ந்து நடிகர் தனுஷ், மாறன், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அடுத்து பாலிவுட் படங்களில் நடிப்பது குறித்த பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனுஷும் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழப்போவதாக சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டனர். அவர்களின் இந்த முடிவு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
சினிமா தொழிலில் தனுஷுக்கும் சிம்புவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே கடும் போட்டி இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்புவும், நடிகர் தனுஷுக்கு விவாகரத்து விஷயத்தில் அட்வைஸ் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷை போனில் தொடர்பு கொண்டு விவாகரத்து முடிவை கைவிடும்படி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. சிம்புவின் அறிவுரையை கேட்ட தனுஷ் மனம் மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.