சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் தனுஷ்.. அதிரடி அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Author: Vignesh
30 August 2023, 6:11 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் , வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் எந்த இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

d50 dhanush sun pictures -updatenews360 SJ suryah Vishnu vishal dushara kalidas

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் தனுஷ் வெளியிட்டிருந்தார். ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததால் தனுஷ் தனது அடுத்த படமான 50 படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது.

d 51 updatenews360

இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து தனுஷின் 51 படத்தை தெலுங்கு இயக்குனர் இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாகவும், தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி திரைப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எதிரி உள்ளது. தனுஷ் 51 படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 493

    0

    0