தனுஷுக்கு திருமணம்? பரபரப்பில் கோலிவுட்!

Author: Selvan
6 November 2024, 5:13 pm

தனுஷின் திருமணம் குறித்த தகவல்தான் தற்போது கோலிவுட்டில் பேசு பொருளாக மாறியுள்ளது.

தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகளை தேர்ந்தெடுத்து முன்னணி நடிகராக மக்கள் மத்தியில் உலா வந்தவர் நடிகர் நெப்போலியன் .புது நெல்லு புது நாத்து படம் மூலம் திரைத்துறைக்கு அடியெடுத்து ஹீரோ ,வில்லன் ,குணச்சித்திர வேடம் என பல வித்தைகளை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு குணால் மற்றும் தனுஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய மூத்த மகனான தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் .தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைபட்டார் நெப்போலியன்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அக்சயா என்ற பெண்ணுடன் வெகு விமர்சியாக ஜப்பானில் திருமண ஏற்பாடுகளை நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது .இதை தொடர்ந்து தனுஷின் திருமணம் குறித்து பல விதமான சர்ச்சைகளும் பேசப்பட்டு வருகிறது.தனுஷ் நீண்ட காலமாக உயிரோடு இருக்க மாட்டார் என்றும் கல்யாண வாழ்க்கைக்கு உகந்தவர் இல்லை என்றும் மருத்துவ ரீதியாக பேசப்படுகிறது.

இதை எல்லாம் அறிந்து கொண்டுதான் அந்த பெண் திருமணத்திற்கு சம்மதித்தாரா? வெறும் பணத்திற்காக சம்மதித்தாரா? என்றும் பலர் விவாதித்து வருகின்றனர். இதை எல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் நவம்பர் 07 ஆம் தேதி புதன் கிழமை ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த இருக்கிறார் நெப்போலியன் .

இதையும் படியுங்க: கடன் வாங்கி நடித்த அமரன் பட நடிகர் : திருப்புமுனையால் அடித்த ஜாக்பாட்!!

திருமணத்திற்கு பல முக்கிய சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் நெப்போலியன். கடந்த செப்டம்பர் 01 ஆம் தேதியே கனடாவில் இருந்து சுமார் 40 நாட்கள் கடல் வழி பயணமாக ஜப்பான் செல்ல திட்டமிட்டு பயணித்து உள்ளார்.

napoleon son marriage

எந்த ஒரு அப்பாவும் செய்யாததை நெப்போலியன் தனது மகனுக்கு செய்து வருகிறார் என்று பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  • Mufasa The Lion King Tamil Dubbed“முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!
  • Views: - 108

    0

    0