கை விரித்த ரஜினிகாந்த்… கவலையில் தனுஷ் : ‘ஸ்டார் ஹோட்டலில் சீக்ரெட் மீட்’ அப்போ.. இதுக்காகவா..?

Author: Vignesh
17 October 2022, 7:00 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பாலிவுட், ஹாலிவுட் நடிகராகவும் திகழ்ந்து உச்சத்தில் இருந்து வருபவர் நடிகர் தனுஷ். தி கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படத்திற்கு பிறகு வாத்தி, ஆயிரத்தில் ஒருவன், கேப்டம் மில்லர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்ந்து வந்த தனுஷ் அடுத்த ஆண்டு புது வீட்டில் சேர்ந்து குடியேறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது. இந்நிலையில், தனுஷ் பிரபல 5 ஸ்டார் ஓட்டலுக்கு அடிக்கடி சென்று ஒருவரை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அது அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை சந்திக்கவில்லையாம்.

Dhanush Aishwarya - Updatenews360

தனுஷ் ஏற்கனவே பா பாண்டியன் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். அதன்பின் மறுபடியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குவதாகவும் இருந்தார். ஆனால் மனைவியை பிரிந்துவிட்டதால் ரஜினியுடன் இருந்த உறவு பிளவு பட்டதால் அது நிறைவேறாமல் போனது. அதனால் சிம்புவுடன் இணைந்து திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுத பிரபல ஸ்டார் ஓட்டலில் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்கள். இருவரில் ஒருவரின் இயக்கத்தில் அப்படம் கூடியவிரையில் ஆரம்பமாகவுள்ளதாம்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 666

    1

    1