43 வயதில் 2-ம் திருமணம்.. விண்வெளி வீரரை மணந்த அனேகன் பட நடிகை..!

Author: Vignesh
28 February 2024, 6:36 pm

தமிழ் சினிமாவில் தனுஷ் உட்பட பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை நடிகை லீனா இவர் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான். நயன்தாரா நடித்த O2 போன்ற தமிழ் படங்களிலும் 70 க்கும் மேற்பட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், லீனா தனது 2004 ஆம் ஆண்டு மோகன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். 2013 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று விலகினார்.

கடந்த சில ஆண்டுகளாக பெற்றோருடன் வசித்து வந்த லீனா தற்போது, பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் மூலம் அறிவித்துள்ளார். இந்த திருமணம் கடந்த ஜனவரி மாதமே நடந்திருந்தாலும், இப்போதுதான் அவர் திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், லீனாவின் கணவர் பிரசாந்த் ஒரு விண்வெளி வீரர் என்பதும், சமீபத்தில் அவர் பிரதமர் மோடியால் பாராட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, லீனா அவருடைய கணவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Anirudh marriage news அனிருத்துக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகல..கண் கலங்கிய அம்மா..மனம் திறந்து பேட்டி.!
  • Close menu