தனுஷ் செய்த காரியம்; கமல் கூட இதை பண்ணல; பகிர்ந்து கொள்ளும் நெட்டிசன்கள்.,,

Author: Sudha
8 July 2024, 10:24 am

தனுஷின் இயக்கத்தில் பா பாண்டி திரைப்படம் 2017 இல் வெளிவந்தது. திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. ராஜ்கிரனை மையமாக வைத்து இயக்கியிருந்தார் தனுஷ். இளம் வயது ராஜ்கிரண் கேரக்டரில் தனுஷ் நடித்திருந்தார்.

தன்னுடைய திரைப்படங்களை முடிந்த அளவிற்கு கிரிஸ்பாக தரவேண்டும் என்று நினைப்பவர் தனுஷ்.

தற்போது தனுஷ் இயக்கியிருக்கும் திரைப்படம் ராயன். இந்த திரைப்படம் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28 க்கு முன்பு வெளியாகும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் ஜூலை 26 அன்று ராயன் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

திரைப்படத்தின் எடிட்டிங் வேலைகள் நடந்து முடிந்துள்ளது.ராயன் திரைப்படத்தை 2 மணி நேரம் 20 நிமிடங்கள் இருக்கும்படி எடிட் செய்து இருக்கிறாராம் தனுஷ்.

இந்தியன் திரைப்படமானது ஜூலை 12 வெளியாகிறது.கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இத்திரைப்படம் ஓடும் என சொல்லப்பட்டது.

தனுஷ் எப்போதுமே தனது திரைப்படங்களை இரண்டரை மணி நேரத்திற்கும் குறைவாக எடிட் செய்து விடுவாராம்.ரசிகர்களுக்கு திரைப்படம் சலிப்பைத் தரக்கூடாது என்பதால் இவ்வாறு படத்தை கிறிஸ்பாக எடிட் செய்து விடுவார் என்கிறது திரை வட்டாரம்.

இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் இந்தியன் செய்யாத ஒன்றை தனுஷ் செய்து இருக்கிறார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • sv shekher shared the test movie poster and criticize it on his x platform என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…
  • Close menu