நேருக்கு நேர் மோதுகிறார் தனுஷ் …..அடுத்த எதிரி சூர்யாவா?

Author: Selvan
8 November 2024, 4:56 pm

தனுஷ் இயக்கி ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் தான் இட்லி கடை.

ஏற்கனவே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கி தயாரித்து முடித்துள்ளார் தனுஷ். இப்படத்தை புது இளையபட்டாளங்களை வைத்து எடுத்துள்ளார்.

தற்போது இட்லி கடை ரிலீஸ் தேதியை அறிவுப்பு செய்திருக்கிறார் .ஏற்கனவே ராயன் படத்தை இயக்கி நடித்து அதிக வசூலை அள்ளிய தனுஷ் மீண்டும் தன்னுடைய இயக்கத்தில் வசூல் வேட்டை பண்ண ரெடி ஆகியுள்ளார்.

இதையும் படியுங்க: https://www.updatenews360.com/cinema-tv/dhanush-55th-movie-update-081124/

இட்லி கடை திரைப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி திரைக்கு வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சிவநேசன் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். படத்தில் வர கூடிய இட்லி கடைக்கும் சிவநேசன் பெயரை வைத்த மாதிரி போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். ஜி வி பிரகாஷ் படத்திற்கு இசை அமைக்கிறார்.

அதே சமயம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44 வது படமும் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகலாம் என எதிர்பாக்கப்படுகிறது.

இதனால் அடுத்த ஆண்டு கோலிவுட்டின் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை என சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?