தனுஷ் 50; ஜூலை 6நடக்கப் போகுது இசை வெளியீடு

Author: Sudha
2 July 2024, 7:09 pm

தனுஷ் நிறைய இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்குள் இருக்கும் இயக்குனர் ஆசை என்றும் இருக்கும்.

தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது திரைப்படத்தை அவரை இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ராயன் என்று பெயரிடப்பட்டிருந்தது.

வித்தியாசமான திரையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் தனுஷுடன் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி எப்படி ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.

வருகிற ஜூலை 26 ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கி விட்டதாக சொல்லப் படுகிறது. ஜூலை மாதம் 6 ஆம் தேதி இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒரு தனியார் கல்லூரியில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்காங்களாம் திரைப்படக் குழு.

  • pavni reddy condition on amir for marriage மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?