நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…
Author: Prasad9 April 2025, 7:51 pm
ஏழ்மையான நிலை…
ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி செய்து அவர்களுடன் துணை நிற்பவர்கள் சினிமாவில் சிலரே. இது நடிகர்களுக்கு மட்டுமல்லாது இயக்குனர்களுக்கும் பொருந்தும்.
ஒரு காலகட்டத்தில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர்கள் காலம் செல்ல செல்ல வாய்ப்புகள் மங்கிப்போவது வழக்கம்தான். அந்த சமயங்களில் அவர்களின் உடல் நிலை மோசமாகிவிட்டால் மிகப்பெரிய சிரமம்.
அந்த வகையில் நடிகர் தனுஷ், தன்னை வைத்து இயக்கிய ஒரு இயக்குனருக்கு மிகப்பெரிய உதவியை செய்துள்ளாராம்.

கர்ணனாக மாறிய தனுஷ்…
அதாவது தனுஷை வைத்து படம் இயக்கிய ஒரு பிரபல இயக்குனருக்கு சில நாட்களுக்கு முன்பு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம். அவரின் சிகிச்சைக்கு கிட்டத்தட்ட ரூ.25 லட்சம் தேவைப்படும் என கூறிவிட்டார்களாம். இந்த செய்தி தனுஷின் காதுகளுக்குப் போக அவர் உடனே ரூ.25 லட்சம் கொடுத்து உதவினாராம். இச்செய்தி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.