பியானோவில் தனுஷ் செய்த மேஜிக் : யார நினைச்சு இப்படி வாசிக்குறாரு…இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
Author: Selvan8 December 2024, 11:55 am
நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நபராக இருந்து வருகிறார்.இவர் தற்போது அடுத்தடுத்து படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார்.

அந்த வகையில் இட்லிக்கடை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.அதே மாதிரி இவருடைய “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் காதலர் தினத்தை குறி வைத்து ரிலீஸ் ஆகிறது.
இவர் அடுத்தபடியாக அமரன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இதையும் படியுங்க: புஷ்பா-2 week end வசூல்… தெரிஞ்சா அசந்து போவீங்க…!
நயன்தாராவுடன் பிரச்னை,மனைவியுடன் விவாகரத்து என தனிப்பட்ட வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்தாலும்,சினிமாவில் அடுத்தடுத்து இடத்திற்கு தன்னுடைய திறமையால் முன்னேறி செல்கிறார்.
இந்நிலையில் தனுஷ் பியானோ வாசித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.இவர் 3 படத்தில் “போ நீ போ” என்ற பாடலை பியானோவில் வாசித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
The mesmerizing "nee partha"
— Dhanush Trends ™ (@Dhanush_Trends) December 6, 2024
by @dhanushkraja will touch your heart ❤️pic.twitter.com/BAtlUziA3u
அதே போல் தற்போது ஹே ராம் படத்தில் வரக்கூடிய “நீ பார்த்த பார்வைக்கு” என்ற பாடலை வாசித்து ரசிகர்களை சந்தோசப்படுத்தியுள்ளார்.தற்போது இந்த வீடியோ ரசிகர்களால் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.யாரை நினைத்து இந்த பாடலை வசிக்கிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.