6 நாட்களில் அபார வசூல்…. “ராயன்” இதுவரை எத்தனை கோடி தெரியுமா?

Author:
1 August 2024, 12:02 pm

தன்னுடைய 50-வது திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைய வேண்டும் என்ற ஒரு கனவோடும் லட்சியத்தோடும் நடிகர் தனுஷ் எழுதி இயக்கி நடித்த திரைப்படம் தான் “ராயல்” அதிரடியான ஆக்சன் காட்சிகளுடன் கூடிய கேங்ஸ்டர் திரைப்படமாக கடந்த ஜூலை 26 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தான் “ராயன்”.

இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ்ராஜ் ,அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பால நட்சத்திர பிரபலங்களும் நடித்திருந்தார்கள் .இந்த திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவ்வளவு சிறப்பான. நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறார்கள் .

இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 6 நாட்கள் ஆகும் நிலையில் இதுவரை வசூல் செய்துள்ள விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி வியக்கவைத்துள்ளது. அதன்படி ராயன் திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ. 96 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்திருக்கிறது.

dhanush-raayan

மேலும், 7 நாட்கள் முடிவில் இப்படம் நிச்சயம் ரூ.100 கோடியை கடந்து விடும் என உறுதியாக கூறப்படுகிறது. இதன் மூலம் தனுஷின் கெரியரிலேயே ராயன் திரைப்படம் தான் மாபெரும் வசூல் ஈட்டி சாதனை பெற்ற திரைப்படமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இதனால் தனுஷ். உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?