தனுஷ் – ராஷ்மிகா ஒன்றாக இருக்கும் வீடியோ லீக் .. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Vignesh
26 February 2024, 3:31 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Dhanushs-Captain-Miller

தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் அண்மையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிய ’கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்திருந்தார். பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான இப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டது. இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் மாஸ் கூட்டணியுடன் அடுத்த திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார் தனுஷ். ஆம், தெலுங்கு சினிமாவின் மெகா ஹிட் இயக்குனராக பார்க்கப்படும் சேகர் கம்முலா உடன் தனுஷ் கூட்டணி வைத்துள்ளார். சேகர் கம்முலா ஃபிடா, லவ் ஸ்டோரி ஆகிய படங்களை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்திருந்தார்.

rashmika mandanna

இந்நிலையில் அவர் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நகர்ச்சுனா நடிக்கவுள்ளார். 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜா உடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள தனுஷ் – ராஷ்மிகா இடையிலான காட்சி இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அட பாவிங்களா சும்மாவே இருக்க மாட்டீங்களா என்று தனது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 217

    0

    0