கேங்ஸ்டர் திரைப்படம் என்றாலே தமிழ் ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில் மங்காத்தா, புதுப்பேட்டை, வடசென்னை உள்ளிட்ட படங்களை அடக்கிக் கொண்டே போகலாம். அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் ராயன்.

கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், சந்தீப் கிசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுருளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் .
இந்த திரைப்படத்தில் தனுஷின் நடிப்பும் அவரது இயக்கமும் அபாரத்தனமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி கொண்டாடித்தள்ளியுள்ளனர்.தனுஷின் 50வது படம் என்பதால் இது அவருக்கு மிகவும் ஸ்பெஷல். பார்த்து பார்த்து செதுக்கி செதுக்கி தனுஷ் உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.
தனுஷின் கெரியரிலே மிக முக்கிய படமாக பார்க்கப்பட்ட புதுப்பேட்டை மற்றும் வட சென்னை உள்ளிட்ட படங்களையே ராயன் தூக்கி வாரி சாப்பிட்டு விட்டதாக விமர்சனங்கள் கூறுகிறது. ராயன் மிகச் சிறந்த திரைப்படம் என ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் ராயன் படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம் வரும் குறித்த தகவல் வெளியாகிய எல்லோரையும் வியப்புடையவைத்துள்ளது. ஆம், இப்படத்திற்கு தனுஷ் ரூ. 45 முதல் ரூ.50 கோடி வரை சம்பளமாக வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் தனுஷின் மிரட்டலான நடிப்பிற்கு அவரது இயக்கத்திற்கும் கிட்டத்தட்ட ரூ.100 கோடி சம்பளம் கொடுத்தால் தான் தகும் என தனுஷ் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.