அண்ணனை கஷ்டப்படுத்திய தம்பி நடிகர்; ஓப்பனாக சொல்லி சந்தோஷப்பட்டாரா? வியப்பில் ரசிகர்கள்

Author: Sudha
9 July 2024, 6:12 pm

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் தனுஷின் 50 வது திரைப்படம்,ஜுலை 26ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.

தன்னை திரையுலகில் அறிமுகம் செய்து வைத்த குருவும், அண்ணனுமான செல்வராகவனை தன் ராயன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் தனுஷ்.

ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. அவ்விழாவில் பேசிய தனுஷ் செல்வராகவன் குறித்துப் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

செல்வா சார் என் ஆசான், என் குரு. நடிப்பு மட்டும் அல்ல கிரிக்கெட், இந்த உலகம் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவர் அவர் தான். பல விமர்சனங்களை தாண்டி என்னை ஸ்டார் ஆக்கினார். இவனெல்லாம் லாம் ஒரு நடிகனா என்று கேட்டார்கள். ஆனால் கேட்டவர்கள் முன்பு என்னை நடிக்க வைத்து டான்ஸ் ஆட வைத்து அழகு பார்த்தார் என்றார்.

மேலும் அவர் இயக்கத்தில் நடிப்பது எளிதான விஷயம் அல்ல. மிகவும் பர்ஃபெக்க்ஷன் எதிர்பார்ப்பார். கண்ணசைவில் சிறு பிழை வந்தாலும் மீண்டும் ரீட்டேக் எடுப்பார். அவர் இயக்கத்தில் நான் நடிக்க அறிமுகமாகும் போது நடிப்பில் தவறு செய்தால் என்னை அடிப்பார், திட்டுவார்.

இப்போது என் இயக்கத்தில் அவரை நடிக்க வைத்து அவரிடம் திரும்ப திரும்ப ரீடேக் வாங்கி நடிக்க வைக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் ஒரு தனி ஃபீல் என பேசினார்.

இதைக் கேட்ட ரசிகர்கள் எத்தனை நாள் இதற்காக காத்திருந்தாரோ என தங்களுக்குள் நகைச்சுவையாக பேசிக் கொள்கின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…