சிம்பு, தனுஷ் உள்பட 4 நடிகர்களுக்கு ரெட் கார்டு?.. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய தயாரிப்பாளர் சங்கம்..!

Author: Vignesh
14 September 2023, 3:37 pm

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு விதமான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்தில் தனுஷ், சிம்பு, விஷால் மற்றும் அதர்வா மீது பல தயாரிப்பாளர்கள் பலவிதமான புகார்களை தெரிவித்திருந்தனர்.

இதற்கான விசாரணை செய்து நான்கு நடிகர்களுக்கும் பலமுறை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பிய நிலையிலும் இவர்கள் யாரும் சரியான விளக்கத்தை அளிக்காத நிலையில், நான்கு பேருக்கும் தற்பொழுது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் ரெட் கார்டு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேனாண்டால் தயாரிப்பில் உருவான படம் 80 சதவீதம் முடிவடைந்த நிலையிலும், அதன் பின்னர் தனுஷ் படப்பிடிப்புக்கு வரவில்லை என்றும், தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்ட நிலையில், சரியான பதில் அவரிடம் இருந்து கிடைக்கவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிம்பு மீது ஏற்கனவே தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகாரின் பெயரில் ரெட் கார்டு கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Simbu - updatenews360

நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பணத்தை முறையாக கையாளவில்லை என நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் மதி கொடுத்த புகாரின் பெயரில் பலமுறை அதர்வாவை விசாரிக்க அழைத்தும் அவர் முறையான பதில் கூறாத நிலையில், அவருக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 411

    0

    0