ஐஸ்வர்யாவுடன் இணைய வைத்த ஜெயிலர் படம்… தனுஷ்க்கு அதிர்ச்சி கொடுத்த மாமனார்!

Author: Vignesh
10 August 2023, 3:00 pm

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் உலகம் முழுவதும் சுமார் 4000 அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை ரஜினியின் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள்.

முன்னதாக படத்தின் ட்ரைலர், பாடல் , ப்ரோமோ காட்சி என ஒவ்வொன்றும் சிறப்பாக இருந்ததோடு படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. குறிப்பாக ரஜினி வயசானாலும் ஸ்டைலும் , அழகும் மாறாமல் இன்னும் அப்படியே இருப்பது ரசிகர்களுக்கு பேரின்பத்தை கொடுத்துள்ளது.

jailer - updatenews360

இங்கு தியேட்டர்கள் திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது. படம் நிச்சயம் சூப்பராக இருக்கும் என படம் பார்க்க குவிந்துள்ள ரஜினி ரசிகர்கள் கூறியுள்ளனர். வெளியான அனைத்து அப்டேட்களும் ரசிக்கும்படியாகவே இருப்பதால், ஜெயிலர் படம் நிச்சயமாக வெற்றியடையும் என்றும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல் நாள் முன் பதிவில் மட்டும் ஜெயிலர் படம் பல கோடி வசூலித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே படம் நிச்சயம் வெற்றி அடையும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொடுத்துள்ளது.

aishwarya - updatenews360

இந்நிலையில், பல நட்சத்திரங்கள் படத்தை பார்த்து வரும் நிலையில், ரஜினி மகள் ஐஸ்வர்யா ரோகினி திரையரங்கிற்கு ஜெய்லர் படத்தை பார்க்க முதல் காட்சிக்கு வந்திருக்கிறார். அவரை தொடர்ந்து நடிகர் தனுஷ் ரோகினி தியேட்டருக்கு ஜெய்லர் படம் பார்க்க சென்றுள்ளார்.

dhanush - updatenews360

மேலும், தனுஷ் மகன்களான யாத்ரா, லிங்காவும் ஐஸ்வர்யாவுடன் தான் படத்தை பார்த்திருக்கிறார்கள். இதை பார்த்த பலர் தனுஷிடம் இருந்து மகன்களை பிரித்துவிட்டாரா ஐஸ்வர்யா என்று கேள்வி எழுப்பியும் தனுஷை யாத்ரா, லிங்கா பார்த்தார்களா என்றும் இணையத்தில் கேள்விகளாக தனுஷ் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் தியேட்டரில் சந்தித்தார்களா? இருவரும் இணைந்து படத்தை பார்த்தார்களா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

aishwarya - updatenews360
aishwarya - updatenews360
aishwarya - updatenews360
  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 447

    0

    0