மருமகன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்?.. தனுஷின் ‘அந்த’ 2 ஆசையை நிறைவேற்றி வைப்பாரா ரஜினி..!
Author: Vignesh7 October 2022, 3:00 pm
ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கும், அப்போது வளரும் நடிகராக இருந்த தனுசுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், நடிகர் தனுஷ் – இயக்குனர் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 9 மாதத்திற்கு முன் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்த செய்தி கோலிவுட் வாட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில், யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்களின் நிலையை கருத்தில் கொண்டு,
ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் இரு குடும்பத்தினரும் சமீபத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது ஏற்பட்ட சமரச பேச்சுவார்த்தையை அடுத்து, தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் இணைந்து தங்களுடைய விவாகரத்தை ரத்து செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் கசிந்தது.
இந்நிலையில் ப.பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த தனுஷ். பிரபல நடிகரும், தனது மாமாவும் ஆன ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக முன்னதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அனைத்து பிரச்சனையும் தீர்ந்துவிட்டதால் தனது படத்தை இயக்கும் வாய்ப்பை தனுஷுக்கு கொடுப்பாரா ரஜினி என்று கோலிவுட் வட்டாரத்தால் பேசப்பட்டு வருகிறது.
மேலும், இப்பத்தில் இயக்குவது மட்டும் இல்லாமல் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்றும் தனுஷுக்கு ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார். படம் முழுக்க வராவிட்டாலும் ஒரு காட்சியிலாவது ரஜினியுடன் வந்துவிட வேண்டும் என்பதே அவரின் விருப்பம் என தெரிவித்துள்ளார். இந்த இரண்டு ஆசைகளும் நிறைவேறுமா என ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே, லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு படத்தில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. மற்றொரு படத்தை இயக்கும் வாய்ப்பு தனுஷுக்கு கிடைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.