வெறித்தனமான ரசிகன்னு நிரூபிச்சிட்டீலே… மருமகனா இல்ல தீவிர ரசிகனா ரஜினிக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்!

Author: Rajesh
12 December 2023, 5:05 pm

கர்நாடக மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து தமிழக மக்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் கடந்து வந்த பாதை மிக கடினமானது. திரைத்துறையில் ஜெயிக்க வேண்டும் என்றால் பளபளப்புடன் கூடிய தேஜசான உடல் தோற்றத்தோடு, வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிற ஃபார்முலாவையே மாற்றியவர் என்றால் அது ரஜினிகாந்த் தான். இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் வாழ்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த வயதிலும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சினிமாவில் டப் கொடுத்து வருகிறார். வசூல் நாயகனாகவும், ரஜினிகாந்த் டாப்பில் இருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கூட இந்த குதிரை அப்போதே நின்றுவிடும் இப்போது நன்றியுடன் என நினைத்தார்கள் ஆனால், 40 வருடத்தை தாண்டி ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

ரசிகர்களின் வாழ்த்தும் கடவுளின் அருளும் என்னை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது என ரஜினிகாந்த் சந்தோஷமாக கூறி வருகிறார். இந்நிலையில், டிசம்பர் 12ம் தேதி அன்று ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி 73 வது பிறந்த நாளை ஒட்டி அவரது மனைவி, மகள்கள், பேரன்கள் என அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

அந்தவகையில் ரஜினியின் தீவிர ரசிகனான தனுஷ் நள்ளிரவு 1 மணிக்கே ” ஹேப்பி பர்த்டே தலைவா ” என கூறி ட்விட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனிப்பட்ட குடும்ப பிரச்சனைகள் இருந்தும், ரஜினிக்கு தனுஷ் மீது வெறுப்பு இருந்தும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் ஒரு ரசிகனாக வாழ்த்தியிருப்பது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தனுஷின் இந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
  • Close menu