தனுஷ்க்கு இது சோதனை காலம்… முக்கிய படத்தை கைவிட முடிவு?!
Author: Udayachandran RadhaKrishnan11 December 2024, 7:03 pm
நடிகர் தனுஷ் இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையால் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார்.
சமீபத்தில் இவர் இயக்கிய ராயன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்து, குபேரா, இளையராஜாவின் பயோபிக், இட்லி கடை என பிஸியாக உள்ளார்.
இளையராஜா பயோபிக் படத்தை கைவிட முடிவு
இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இளையராஜாவின் பயோபிக் படத்தின் துவக்க விழா நடந்தது. கமல்ஹாசன், வெற்றிமாறன் பங்கேற்றனர்.
இதையும் படியுங்க : ஏழைகளுக்காக வாழும் தெய்வம்.. ரூ.2 லட்சம் கொடுத்த KPY பாலாவுக்கு குவியும் பாராட்டு!
கமல் இந்த படத்திற்கு கதை எழுதுவதாக கூறிய நிலையில் சமீபத்தில் அவர் விலகினார். இருந்தும் தனுஷ் இந்த படத்தில் தொடர்ந்து நடிப்பார் என கூறப்பட்டது.
ஆனால் தற்போது வந்துள்ள தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது படத்தின் பட்ஜெட் அதிகரித்துள்ளதால் படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.