சிவகார்த்திகேயன் இல்லை.. அந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது தனுஷ் தான்.. மிஸ் ஆகிடுச்சு..!

Author: Vignesh
31 May 2024, 2:34 pm

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

sivakarthikeyan

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.

sivakarthikeyan-updatenews360

தற்போது, சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் திரைப்படம் உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 2017ம் ஆண்டே துவங்கிய இப்படம் சில பிரச்சனையால் 5 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்து இந்த பொங்கலுக்கு தான் ரிலீனது.

இந்நிலையில், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, தனுஷ் தன்னுடைய தயாரிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த முதல் ஹிட் திரைப்படத்தை கொடுத்தார். அந்த சமயத்தில், சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, மெரினா உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல ரீச் அவருக்கு கொடுக்கவில்லை. ஆனால், தனுஷ் தயாரிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல ரிச் கொடுத்தது.

sivakarthikeyan-updatenews360

அதை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் உயர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். இப்படி, ஒரு வளர்ச்சியை கொடுத்த எதிர்நீச்சல் திரைப்படம் முதலில் தனுசுக்காக தான் உருவாக்கப்பட்டதாம். இது குறித்து துரை செந்தில்குமார் கூறும் பொழுது தனுஷ் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு இயக்குனர் வேண்டும் என கேட்டிருந்தார். அந்த சமயத்தில், இது குறித்து வெற்றிமாறன் சார் என்னிடம் சொன்னார். அந்த சமயத்தில், எதிர்நீச்சல் திரைப்படத்திற்கான கதை தனுசுக்காக எழுதி வைத்திருந்தேன். அந்த கதையை கொடுக்கும் பொழுது அவருக்கு பிடித்திருந்தது. அதனால், அந்த படத்தில் சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்து வெளியிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

  • Rashmika Mandanna Viral Video சினிமாவுக்காக 19 வயதில் ராஷ்மிகா பண்ண காரியத்தை பாருங்க..வைரலாகும் வீடியோ..!
  • Views: - 265

    0

    0