மீண்டும் இளையராஜாவை நினைக்க வைக்கும் தனுஷ் வாய்ஸ்.. வாத்தி படத்தின் 1st Single பாடலை தனுஷ் பாடும் வீடியோவை வெளியிட்ட ஜீவி பிரகாஷ்..!!

Author: Vignesh
9 November 2022, 2:00 pm

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.

கடைசியாக இவரது நானே வருவேன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தனுஷ் வாத்தி, கேப்டன் மில்லர், வெற்றிமாறனுடன் ஒரு படம், ஆயிரத்தில் ஒருவன் 2, சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம், என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார்.

vaathi - updatenews360

கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வருகிறார். சித்தாரா என்டேர்டைன்மென்ட்ஸ் மற்றும் Fortune Four சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் வாத்தி, SIR படம் தனுஷுக்கு அடுத்து ரிலீஸ் ஆகவுள்ளது.இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார்.

இந்த படம் தமிழ், தெலுங்கில் bilingual ஆக உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் Sir என்றும் பெயரிட்டுள்ளனர். மலையாள நடிகை சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

vaathi - updatenews360

ஜீ.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்த படத்தின் முதல் பாடல் தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது. இதனை ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் பதிவிட்டுள்ளார்.

  • Allu Arjun Pushpa 2 Global Successடாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
  • Views: - 881

    8

    3