மீண்டும் ஐஸ்வர்யா உடன் வாழ ஆசைப்படும் தனுஷ்? கோலிவுட்டின் பரபரப்பான செய்தி!
Author: Rajesh9 February 2024, 7:04 pm
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக இருந்து வந்தவர்கள் ஐஸ்வர்யா – தனுஷ். இவர்கள் காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மிகச்சிறந்த திறமையை தன்னுள் வைத்திருந்தாலும் அதை படத்திற்கு படம் வெளிக்காட்ட பெரிதும் உதவியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
ஆம் தன் மருமகன் என்பதால் அவரின் படங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் ரஜினி என்ற பேக்கப் உடன் வெளியாகி கிடுகிடுவென முன்னனி நடிகர் ஆனார். இன்று அசைக்க முடியாத இடத்தில் டாப் நடிகர் என்ற அந்தஸ்தில் இருக்கும் தனுஷ் ஒரு கட்டத்தில் ரஜினியின் உதவிகளை மறந்துவிட்டு அவரை துட்க்ஷம் என கருதி விட்டார் என்று தான் சொல்லவேண்டும்.
ஆம் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை திடீரென பிரிந்துவிட்டார். தற்போது இவர்கள் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா தனுஷை பிரிந்த பின் அந்த சோகத்தில் மூழ்கி முடங்கிவிடாமல் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆம், ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படத்தினை இயக்கியுள்ளார். இப்படம் உலகம் முழுக்க இன்று வெளியாகியுள்ளது. தற்போது கூறவரும் தகவல் என்னவென்றால் தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிந்தாலும் அவருக்கு தொடர்ந்து தூது விட்டு வருகிறார்.
ஆம், ஐஸ்வர்யா தொடர்ந்து செய்யும் அடுத்தடுத்த முயற்சிகள் மற்றும் வெற்றிகளுக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடன இயக்குனரான ஜானி மாஸ்டரை வைத்து ஐஸ்வர்யா எடுத்த ஒரு ஆல்பம் பாடலுக்கு தனுஷ் வாழ்த்து கூறியிருந்தார். அதே போல் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது படக்குழுவிக்கு தனது வாழ்த்துக்களை கூறியிருந்தார்.
இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ள லால் சலாம் படத்திற்கு ” லால் சலாம் இன்று முதல்” என கூறி வாழ்த்தியுள்ளார். தனுஷின் இந்த ட்விட்டர் பதிவு ரசிகர்களுக்கு புது நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஆம், ரஜினியின் தீவிர ரசிகராக தனுஷ் இருந்தாலும் லால்சலாம் படத்தை ஐஸ்வர்யா இயக்குவதால் கண்டுக்கொள்ளமாட்டார் என்று தான் சமூகவலைத்தளங்கள் முழுக்க பேசப்பட்டு வந்தது. ஆனால், தனுஷ் தொடர்ந்து லால் சலாம் படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்ததால் அவர்கள் இருவரும் மீண்டும் சேர வாய்ப்பு அதிகம் இருப்பதாக பேசப்படுகிறது.
ஆம், அவர்கள் பிரிந்தாலும் நல்ல புரிதல் உடன் தான் இருக்கிறார்கள். மகன்கள் விஷயத்தில் இருவரும் சேர்ந்தே முடிவுகள் எடுக்கிறார்கள். தனுஷ் வீட்டில் ஏதேனும் விஷேஷம் என்றால் ஐஸ்வர்யா இரண்டு பிள்ளைகளையும் அங்கு அனுப்பி வைக்கிறார். அதே போல் ஐஸ்வர்யாவின் லால் சலாம் படத்தின் விழாக்களுக்கு தனுஷ் இரண்டு மகன்களையும் அனுப்பி வைத்தார். எனவே இவர்கள் இருவரும் இதே புரிதல் உடன் ஒன்று சேர்ந்தால் அது இன்னும் அழகாக இருக்கும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்த செய்தி தான் தற்ப்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.