சூர்யாவுக்கு முன்னாடியே அவர் சிக்ஸ் பேக் வச்சிந்தார்- சிவகுமாருக்கு பதிலடி கொடுத்த விஷால்?
Author: Prasad25 April 2025, 1:13 pm
சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர்
சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதனை முன்னிட்டு இத்திரைப்படத்தித்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் சூர்யாவின் தந்தையான சிவகுமார் மேடையில் பேசியபோது, “உடம்பை போட்டு வருத்தி சிக்ஸ் பேக் வைத்தவர்கள் யார் இருக்கிறார்கள்? சூர்யாவுக்கு முன்பு சிக்ஸ் பேக் வைத்த தமிழ் நடிகர்கள் உண்டா?” என மிகவும் பெருமையோடு பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் ரசிகர்கள் பலரும் “சத்யம்” படத்தில் சிக்ஸ் பேக்கோடு நடித்த விஷாலை குறிப்பிட்டு வந்தனர்.

அவர்தான் ஃபர்ஸ்ட்…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட விஷாலிடம் இதனை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு விஷால், “தமிழில் முதன் முதலில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் தனுஷ். முதன்முதலில் தனுஷ்தான் பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தவர். அதன் பின் நான் சிக்ஸ் பேக் வைத்தேன். ஆனால் அவர்கள் அதனை மறந்துகிட்டார்கள்” என்று பதிலளித்தார்.

சூர்யா “வாரணம் ஆயிரம்” திரைப்படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தார். இத்திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளியானது. விஷால் நடித்த “சத்யம்” திரைப்படமும் அதே ஆண்டுதான் வெளியானது குறிப்பிடத்தக்கது.
