ஜெயிலர் படம் பார்க்க ஓடோடி வந்த தனுஷ் – அனிருத் செஞ்ச வேலையை கொஞ்சம் பாருங்களேன் (வீடியோ)

Author: Shree
10 August 2023, 11:17 am

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களில் அதிகாலையிலேயே படம் வெளியானது. கர்நாடகாவில் காலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியானது.

jailer - updatenews360

தொடர்ந்து, தமிழகத்தில் 9 மணிக்கு படம் ரிலீஸாகியுள்ளது. படம் வெளியானதால் தியேட்டரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆட்டம், பாட்டத்துடன் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும், அவரது மகன் கேரக்டரில் வஸந்த் ரவியும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் கேமியோ ரோலில் மோகன்லால், தமன்னா, ஜாக்கி ஷெராப், ஷிவ ராஜ்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். வில்லனாக கயல் பட நடிகர் விநாயகன் நடித்துள்ளார்.

kavalaya song-updatenews360

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒவ்வொரு தியேட்டரிலும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பாலாபிஷேகம் செய்தும் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில ஜெயிலர் படம் பார்க்க தனுஷ் தியேட்டருக்கு ஓடிவந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகியுள்ளது. தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிந்த நிலையிலும் ரஜினி ரசிகராக தனுஷ் ஜெயிலர் படம் பார்க்கவ வந்தது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அனிருத் தியேட்டரில் பாடல் பாடி ஆர்ப்பரித்த வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பித்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ