சோனியா அகர்வால் வீட்டுக்கு போன தனுஷ் – ஷூட்டிங் ஸ்பாட்டிலே ஓங்கி அறைந்த செல்வராகவன்!
Author: Shree11 March 2023, 12:03 pm
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மற்றும் வித்யாசமான கண்ணோட்டத்தில் படம் எடுப்பவர் இயக்குனர் செல்வராகவன். 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.
அந்த படத்தில் தான் தனுஷையும் அறிமுகம் செய்து வைத்தார். தான் கடந்து வந்த இளமை கால உணர்வுகளை ரசிகர்களுக்கு ஏற்றவாறு அந்த படத்தில் காட்சிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார்.

அதன் பிறகு 2003ம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தை இயக்கினார். இப்படத்திலும் தனுஷ் தான் ஹீரோ. அதில் சோனியா அகர்வால் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தின் காட்சி ஒன்றில் தனுஷை சோனியா அகர்வால் வீட்டுக்கு அழைத்து செல்வார்.
செல்வராகவன் ஒவ்வொரு காட்சியிலும் மிகவும் உன்னிப்பாக நடிக்க சொல்வராம். எத்தனை முறை கண்களை சிமிட்ட வேண்டும் என்பது வரை அவர் சொல்வது போல் தான் நடிக்க வேண்டுமாம் .

ஆனால், அந்த காட்சியில் தனுஷ் சரியாக நடிக்கவில்லை. திரும்ப திரும்ப தவறு செய்ததால் அங்கேயே பல பேர் முன்பு தனுஷின் கன்னத்தில் செல்வராகவன் ஓங்கி அறைந்துவிட்டாராம். பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து தனுஷனை நன்றாக நடிக்க சொன்னார்கள். இது பழைய சம்பவமாக இருந்தாலும் இப்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.