தனுஷ் படத்திற்கு இனி இசையமைக்க போவதில்லை – அதிரடி முடிவெடுத்த அனிருத்? காரணம் கவின்!

Author: Shree
28 March 2023, 11:31 am

உருவத்திற்கும் திறமைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமேயில்லை என எல்லோரும் அனிருத் திறமை பார்த்து மெர்சிலிர்த்து போனார்கள். சூப்பர் ஸ்டாரின் உறவுக்காரராக இருந்தாலும் தன் திறமையால் பெரிய நட்சத்திர நடிகர்களையே கால்ஷீட்டிற்காக காத்திருக்க வைத்தார்.

ஆம், அனிருத்தின் எண்ட்ரி அப்படித்தான் இருந்தது. ‘ஒய் திஸ் கொலவெறி’ என தனுஷ் தங்கிலீஸில் வரிகளை எழுதி கொடுக்க, அதற்கு அனிருத் போட்ட மெட்டு உலகம் முழுவதும் வைரல் ஆனது. எண்ட்ரி ஆன முதல் பாட்டிலேயே ஒட்டு மொத்த உலகத்தையும் உலுக்கி விட்டார் அனிருத். மேலும், ‘நீ பார்த்த விழிகளில் கரையவும் ‘போ நீ போ’பாடலில் உருகவும் வைத்தார். இவரை விட கூடாது என ஒட்டுமொத்த சினிமா தயாரிப்பாளர்களும் அனிருத் வீட்டு வாசலில் காத்துக்கிடந்தார்கள்.

தற்போது கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் தான். பெரிய நடிகர்கள் படங்களே நோ சொல்லும் அளவிற்கு படு பிசியாக இருந்து வருகிறார். அப்படிதான் அண்மையில் தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

ஆனால், கவின் படத்திற்கு க்ரீன் சிக்னல் காட்டியுள்ளாராம். காரணம் கவின் படத்தை இயக்கும் இயக்குனர் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் ,அனிருத்தின் நெருங்கிய நண்பராம் அனிருத் இசையமைக்கும் விளம்பர படங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடத்தப்படும் இசை விழா அனைத்திற்கும் சதீஷ் தான் டான்ஸ் மாஸ்டர்.

அதற்கான கைமாறு உதவியாகவும் , நண்பனின் வளர்ச்சிக்கும் உதவவே அனிருத் தனுஷ் படத்தை கூட நிராகரித்துள்ளார். இது அனிருத்தின் அப்பாவுக்கு பிடிக்கலையாம். கவின் எல்லாம் ஒரு ஆளா? தனுஷ் தான் முக்கியம் என எடுத்து கூற அனிருத் தன் அப்பாவை கவின் படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்க சொல்லி வாயடைத்துவிட்டராம். ஆக தனுஷை தான் டீலில் விட்டுவிட்டார்கள். இனி அனிருத்தே கேட்டாலும் தனுஷ் வாய்ப்பு கொடுக்க கொஞ்சம் யோசிப்பார் என்கிறது சினிமா வட்டாரம்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…