தமிழ் சினிமாவில் தலைதூக்கும் போலி காஸ்டிங் கால்கள்? பிரபல தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!
Author: Hariharasudhan19 February 2025, 2:25 pm
தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் பெயரில் வரும் காஸ்டிங் அழைப்புகள் முற்றிலும் போலியானவை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், உண்டர்பார் பிலிம்ஸ் (Wunderbar Films) மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார். இந்தத் தயாரிப்பு நிறுவனத்தை தனுஷின் நண்பர் ஷ்ரேயஸ் என்பவர் கவனித்து வருகிறார். இந்த நிலையில், முக்கிய அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக, ஒரு செல்போன் எண்ணுடன் ஷ்ரேயஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “இது எங்கள் அழைப்பு எண் அல்ல. வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் என் பெயரில் வரும் காஸ்டிங் அழைப்புகள் முற்றிலும் போலியானவை. என் புகைப்படம் தவறுதலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, கவனமாக இருக்கவும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Wunderbar Films Movies: ’3’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளரான தனுஷ், எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, மாரி, விசாரணை, வடசென்னை, இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய 15க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளது. இந்தப் படங்கள் பெரும்பாலும் லாபத்தையேக் கொடுத்துள்ளன.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன் நிறுவனமும், காஸ்டிங் ஏஜெண்ட்களை நியமிக்கவில்லை என எச்சரிக்கைப் பதிவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, தற்போது சமூக வலைத்தளங்களில் வரும் சினிமா வாய்ப்புகளை பலமுறை உறுதிப்படுத்திய பிறகு தங்களது தகவல்களை அனுப்ப வேண்டும்.
இதையும் படிங்க: எல்லாம் உங்களுக்காக தான்… இணையத்தில் வைரலாகும் SK-வின் வெறித்தனமான வீடியோ.!
காஸ்டிங் ஏஜெண்ட்ஸ்: சினிமாவில் காஸ்டிங் ஏஜெண்ட்ஸ் என்பது, ஒரு படத்திற்குத் தேவையான துணை நடிகர், நடிகைகள், குழுக்கள், உள்ளூர் மக்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநரிடம் உறுதிப்படுத்தி, அதற்கென ஊதியத்தைப் பெறும் ஒரு குழு வேலையாகும்.