இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு இந்தாண்டு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் Mission : Chapter 1 உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் வெற்றி மகுடம் சூட்டியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ’கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியா விடுதலை ஆகும் முன்னர் பிரிட்டிஷ் மற்றும் இந்தியர்களுக்கு நடந்த போர் குறித்து பீரியட் ஜானர் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ள தனுஷ் பிரிட்டிஷ் ராணுவத்தில் வேலை பார்க்கும் கேப்டன் மில்லர் கெட்டப்பில் ரொம்பவே இளமையாக நடித்து மாஸ் காட்டியுள்ளார் மேலும் இன்னும் இரண்டு கெட்டப்கள் ஆக்ஷனில் தெறிக்கும் என கூறப்படுகிறது. பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருவதையே தனது லட்சியமாக கொண்டுள்ள தனுஷ், அதில் சேர்ந்த பின்னர் அவரது வாழ்வில் நடக்கும் மாற்றங்கள் தான் “கேப்டன் மில்லர்” படத்தின் கதை.
பிரிட்டிஷ் ராணுவம் இந்திய மக்களை சித்ரவதை செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் உள்ளூர் மக்களுக்காக புரட்சியில் களமிறங்கும் தனுஷ் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார்.கடைசி 30 நிமிடங்கள் முழுக்க முழுக்க ஆக்ஷனில் தெறிக்கவிட்டுள்ளதாம். இதுவரை பார்த்திராத தனுஷை இந்த படத்தில் நிச்சயம் பார்க்கலாம் ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் படத்துக்கு பெரிய பலம். நடிகை பிரியங்கா மோகனின் கதை மிகவும் போல்டாக உள்ளதாம்.
எனவே கேப்டன் மில்லருடன் போட்டியில் இறங்கிய அயலான், மற்றும் மிஷன் சேப்டர் 1 ஆகிய திரைப்படங்களை அதகளம் செய்துவிட்டார் தனுஷ். இப்படத்திற்கு ஆடியன்ஸின் பாசிட்டிவான விமர்சன்கள் மக்களின் கவனத்தை அதிகரித்து கேப்டன் மில்லர் படத்தை பார்க்க தூண்டியுள்ளது. எனவே பல வருட தடைகள் , பிரச்சனைகளுக்கு பிறகு வெளியான அயலான் படம் தனுஷால் சறுக்கலை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே இனிமேல் சிவகார்த்திகேயன் தேறுவது மிகக்கடினம் என்கிறார்கள் திரையுலக வட்டாரங்கள்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.