தனுஷை வைத்து படம் இயக்கிய பிரபலம் திடீர் மரணம்…. திரையுலகம் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
15 April 2025, 10:59 am

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரை வைத்து ஆரம்ப காலக்கட்டத்தில் ஏராளமான படங்களை இயக்கினர்.

இதையும் படியுங்க: திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!

அதில் முக்கியமானர் எஸ்எஸ் ஸ்டான்லி. இவர் ஏப்ரல் மாதத்தில் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் தனுஷை வைத்து புதுக்கோட்டையில் சரவணண் என்ற படத்தை இயக்கினார்.

படம் சுமாராக இருந்தாலும், பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. தொடர்ந்து மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட படங்களையும் இயக்கினார். சில படங்களில் நடிகராகவும் நடித்திருந்தார்.

Director Ss Stanley Dead

இந்த நிலையில் எஸ்எஸ் ஸ்டான்லி இன்று காலை உடல்நலக்குறைவால் திடீர் மரணமடைந்தார். இன்று மாலை வளசரவாக்க மின் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. எஸ்எஸ் ஸ்டான்லிக்கு வயது 57.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!
  • Leave a Reply