2 மாதங்களுக்கு ஒரு படம்? தனுஷ் எடுக்கும் விபரீத முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2025, 1:42 pm

நடிகர் தனுஷ் நல்ல திறமையுள்ள ஒரு நடிகர். ஆரம்பத்தில் தனது அண்ணன் மூலம் சினிமாவில் கோலோச்சினாலும், பிறகு இசை, பாடல், இயக்கம் என அனைத்திலும் கைதேர்ந்தார்.

பவர் பாண்டி படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த தனுஷ், தற்போது 3 படங்களை இயக்கியுள்ளார். பாடல் எழுதுவதிலும் வல்லமை பெற்ற தனுஷ், குரல் வளத்திலும் இசைஞானி சாயல் உள்ளதாகவும் போற்றப்பட்டார்.

இதையும் படியுங்க: சோபிதா வெளியிட்ட போட்டோ…நாக சைதன்யாவிற்கு இப்படி ஒரு திறமையா.!

தற்போது இட்லி கடை படத்தை இயக்கி வரும் தனுஷ், தொடர்ந்து கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இதையடுத்துதான் அவர் ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இந்த பிப்ரவரி மாதம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை ரிலீஸ் செய்த அவருக்கு கலவையான விமர்சனங்களையே பெற்று தந்தது. குறிப்பாக நாயகன் பீர் அடிப்பதும், அதை பிடுங்கி நாயகி அடிப்பது கலாச்சார சீர்கேடு என்ற பேச்சு எழுந்தது.

இப்படியிருக்கையில் தனது நடிப்பில் உருவாகும் படத்தை அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். ஏப்ரல் மாதம் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் குபேரா படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவித்துள்ளது. இது ஒரு விபரீத முடிவுதான் என சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

காரணம் சுந்தர் சி, விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி போன்றவர்கள் ஒரு வருடத்தில் அதிக படங்களை ரிலீஸ் செய்து எதுவும் சொல்லும் அளவு ஓடாததால் அந்த முடிவை கைவிட்டுவிட்டனர்.

Dhanush

ஆனால் தனுஷ் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்று தெரியவில்லை. ரசிகர்கள் ஒரு பக்கம் அடுத்தடுத்து பட ரிலீஸ் ஆவதால் மகிழ்ச்சியாக இருந்தாலும், தனுஷ்க்கு கட்டாய ஹிட் ஒன்று வேண்டும் என்பதால் இந்த முடிவை கைவிட வேண்டும் என கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.

  • Prashanth Neel Dragon title issue ‘டிராகன்’ படத்தால் தெலுங்கு பட இயக்குனர் புலம்பல்…துரோகம் செய்தாரா அஸ்வத் மாரிமுத்து.!
  • Leave a Reply