சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காமல் நடந்த கொடுமை..! பிரபல நடிகர் போட்ட பிளான்: உடந்தையாக இருந்த ப்ளூ சட்டை..?

Author: Vignesh
18 December 2022, 11:45 am

தனுஷ் எல்லா தரப்பையும் கவரும் வகையில் படங்கள் நடிக்க கூடியவர். அவர் தேர்வு செய்து நடித்த கதைகள் அவரது கெரியர் வளர்ச்சிக்கு பெரிய காரணமாக அமைந்தது. அப்படி அவர் நடித்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதேபோல் தான், மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார்.

Dhanush updatenews360 2

இவர் டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் டான். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு, 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகர் என்ற இடத்தினை பெறக்காரணமாக இருந்தவர் நடிகர் தனுஷ். ஆனால் தற்போது இருவருக்கும் பிரச்சனை என்று கூறப்பட்டு வருகிறது. இருவரும் சந்திப்பதே இல்லை என்ற தகவலும் கோலிவுட் வட்டாரத்தில் பரவியது.

sivakarthikeyan-Updatenews360-1

எப்படி அஜித் – விஜய் படங்கள் வந்தால் இருத்தரப்பு ரசிகர்கள் சண்டையிட்டுக்கொள்கிறார்களோ, அதேபோல் தான் தனுஷ் – சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மாறிமாறி வாக்குவாதம் சண்டை என்று இருந்து வருகிறார்கள்.

சமீபத்தில் கூட திருச்சிற்றம்பலம் – பிரின்ஸ் படம் வெளியாகி இரு நடிகர்களின் ரசிகர்கள் சண்டையிட்டு கருத்துக்களை பகிர்ந்து வந்தது சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசுபொருளாக இருந்தது.

sivakarthikeyan-Updatenews360-1

இந்நிலையில், சிலரின் சூழ்ச்சியால் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் படுதோல்வியை அடைந்துள்ளது என்றும் வேண்டுமென்றே நெகடிவ் விமர்சனத்தை கூறி தோல்வியடையச் செய்துள்ளனர் என்றவாறு கிசுகிசுகப்பட்டு வருகிறது.

இதனிடையே, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஒரு வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். அதில் ப்ளூ சட்டை மாறன் தனுஷின், திருச்சிற்றம்பலம் படத்தை புகழ்ந்தும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை பெரிதும் விமர்சித்தும் இருக்கிறார்.

sivakarthikeyan-Updatenews360-1

சிலரின் அறிவுறுத்தலின் பேரில் தான் ப்ளூ சட்டை மாறன் இப்படி விமர்சித்துள்ளார் என்பதற்கு ஆதாரமாக ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பிரின்ஸ் படத்தினை பார்க்க ப்ளூ சட்டை மாறனுடன் தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணிய சிவா சென்றுள்ளார். அவர் கூறியதால் தான் ப்ளூ சட்டை இப்படியான விமர்சனத்தை பிரின்ஸ் படத்துக்கு கொடுத்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசுபொருளாக இருக்கிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 692

    1

    0