சும்மா கூப்பிட்டா கூட போக நான் ரெடி… தர்ஷா குப்தாவா இப்படி இறங்கிட்டாங்க!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2025, 6:24 pm

தை அமாவாசை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பிரத்தியங்கரா தேவி ஆலயத்தில் நடைபெற்ற ஒரு லட்சத்து 8 எலுமிச்சை யாகம் சிறப்பு பூஜையில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடிகை பங்கேற்றார்.

தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு பகுதியில் அமைந்துள்ள பிரத்யங்கிரா தேவி ஆலயத்தில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு உலக நன்மைகாக விவசாயம் செழிக்க வேண்டி 1 லட்சத்து 8 எலுமிச்சை யாகம் சீனிவாச சித்தர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதையொட்டி பிரித்தியங்கரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 1 லட்சத்து 8 எலுமிச்சை பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டு பின்னர் அவை பூஜை செய்யப்பட்டு யாகசாலையில் போடப்பட்டது.

இதையும் படியுங்க : புரட்சியை கையில் எடுத்த சிவகார்த்திகேயன்…சுதா கொங்கரா இயக்கும் SK 25 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு..!

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்த பூஜையில் அமெரிக்கா, கனடா, ரஷ்யா, கலிபோர்னியா போன்ற வெளிநாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டினர் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தர்சா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

பின்னர் நடிகை தர்சா குப்தா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், இன்றைய தினம் தூத்துக்குடியில் உள்ள பிரத்தியங்கரா கோவிலுக்கு வந்து பொங்கலிட்டு 1 லட்சத்து 8 எலுமிச்சை யாகம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டேன், இது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது இக்கோவிலில் நினைத்த காரியம் நடப்பதாக கூறினார்கள் அதன் அடிப்படையில் தான் இப்போது தூத்துக்குடிக்கு வந்து இந்த யாகத்தில் கலந்து கொண்டு மக்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்றார்.

குக் வித் கோமாளியில் வந்தேன் அடுத்து பிக் பாஸ், அடுத்த லெவலுக்கு முன்னேறி போக வேண்டும் என்பதற்காக வேண்டுதலின் அடிப்படையில் தான் வந்ததாக கூறினார்.

Dharsha Gupta Talk About TVK

தெலுங்கிலும் தற்போது தமிழில் ஸ்டோரியிலும் தான் நடித்து வருவதாக கூறினார். ஹீரோயின் கதை அம்ச கொண்ட ஒரு நல்ல படத்திற்காக தான் காத்திருப்பதாக கூறினார்.

தனக்கு கமல் சார் ரொம்ப பிடிக்கும் அதே நேரத்தில் விஜய் சேதுபதியின் பீட்சா படத்தின் தீவிர ரசிகை என்றார். அவரைப் பார்த்ததே மகிழ்ச்சியாக இருந்தது என்றார். கமல் சாருக்கும் விஜய் சேதுபதிக்கும் உள்ள வித்தியாசம் இவர் ஒரு ஜாலியாக மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவர் என்றார்.

Dharsha Gupta Talk About Vijay

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தது தனக்கு பிடிக்கவில்லை எனக் கூறிய அவர், அங்கு சாப்பிட்டு விட்டு தூங்கிவிட்டு டாஷ் பண்ணிய பிறகு ரொம்ப மன அழுத்தம் இல்லாமல் யுவன் சந்தோசமாக இருந்ததாக குறிப்பிட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தொடர்ந்து ஆன்மீக சுற்றுப்பயணம் திருச்செந்தூர் கேரளா கோவில் முடித்துவிட்டு தற்போது தூத்துக்குடி வந்துள்ளதாக கூறினார். என்ன நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் சும்மா போய் நின்றாலே அவரது ரசிகர்கள் கூட்டம் அதிகமாக கூடும், நானும் அவர் அடுத்த முதல்வராக வருவார் என்று நம்பிக்கையோடு காத்திருப்பதாக கூறினார்.

Dharsha Gupta

அவர் கட்சி ஆரம்பித்த பிறகு புதிதாக என்ன செய்யப் போகிறார், என்ன புதுசாக நடக்கப்போகிறது என்பதை பார்ப்பதில் தனக்கு மிகுந்த ஆர்வமாக உள்ளதாக கூறினார். என்னை கட்சியில் சேருமாறு அவர் சும்மா கூப்பிட்டால் கூட போய் சேர்ந்து விடுவேன் என்றார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!