HARDWORK இல்லாம எதுவும் EASY இல்ல… விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த தர்ஷா குப்தா!!!

Author: Vignesh
2 January 2023, 7:00 pm

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

dharsha gupta - updatenews360.jpg 4

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி வைத்துள்ளார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும்.

dharsha gupta - updatenews360.jpg 4

தற்போது, திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்து இருந்தார். அந்த படம் மக்களிடையே சுமாரான வெற்றியை பெற்றது.

ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னி லியோன். இவர் தற்போது பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தனக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருப்பதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் சன்னி லியோன்.

dharsha gupta - updatenews360.jpg 25

அந்த வகையில் தற்போது தமிழில் இவர் நடிப்பில் ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது. பேய் படமான இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சன்னி லியோன். இப்படத்தில் நடிகை தர்ஷா குப்தா, நகைச்சுவை நடிகர் சதீஷ், பிக்பாஸ் பிரபலம் ஜிபி முத்து ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை பார்த்து, உனக்கு கவர்ச்சியை தாண்டி என்ன தெரியும் என சிலர் கிண்டலடித்துள்ளனர்.

dharsha gupta - updatenews360.jpg 2.jpg 3

அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தர்ஷா ஓ மை கோஸ்ட் படத்தில் தான் நடித்த ஸ்டண்ட் காட்சியின் மேக்கிங் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கவர்ச்சியை தாண்டி உங்களின் உழைப்பையும் நடிப்புத் திறனையும் காட்டுங்கள் என்று கூறிய அனைவருக்கும் இந்த ஓஎம்ஜி படத்தின், BTS வீடியோவை சமர்ப்பிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த காட்சி படமாக்கப்பட்டபோது காலையிலிருந்து மாலை 6 மணிவரை ஒரு சொட்டி தண்ணிகூட குடிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், கடின உழைப்பின்றி எதுவும் ஈஸியாக நடந்து விடாது என தன்னைப்பற்றி விமர்சனம் செய்தவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

  • Mammootty replaced in Baasha Movieரஜினியுடன் மம்முட்டி நடிக்க வேண்டிய இன்னொரு படம்.. பறிபோன வாய்ப்பு!
  • Views: - 550

    2

    0