அந்த விசயத்திற்கு சரிப்பட்டு வரல.. கோடீஸ்வரனாக இருந்தாலும் வேண்டாம்..- பிரேக்கப் குறித்து தர்ஷா குப்தா ஓபன் டாக்..!

Author: Vignesh
2 May 2023, 10:30 am

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

dharsha gupta - updatenews360.jpg 4

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும்.

dharsha gupta - updatenews360.jpg 4

தற்போது, திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்து இருந்தார். அந்த படம் மக்களிடையே சுமாரான வெற்றியை பெற்றது.

ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் அவர் நடித்து இருக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் தர்ஷா குப்தா வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கும் ரசிகர்கள் ஏராளம் இருக்கின்றனர்.

dharsha gupta - updatenews360.jpg 4

இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் தர்ஷா குப்தா தனது காதல் பிரேக்கப் பற்றி தெரிவித்து இருக்கிறார். தான் பிரேக்கப் செய்த காதலன் தற்போது வரை தன்னிடம் கெஞ்சிக்கொண்டிரு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

மேலும், “நம்பிக்கை தான் முக்கியம் என்றும், ஒரு முறை அது போய்விட்டால் அவ்வளவு தான் எனவும், Trust இல்லை என்றால் கோடீஸ்வரனாக இருந்தால் கூட தனக்கு வேண்டாம் எனவும், குடிசையில் கூழ் குடித்தாலும் பரவாயில்லை, உண்மையாக இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்து இருக்கிறார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 515

    0

    0