காமெடி என்ற பெயரில் அடித்த கூத்து; பிரபல நடிகரின் படத்தில் 30 நிமிடத்தை வெட்டி வீசிய இயக்குனர்;
Author: Sudha22 July 2024, 3:14 pm
பல வருடங்களுக்கு முன்பு ரசிகர்களை கவர்ந்த மாபெரும் வெற்றி பெற்ற படங்களை ரீ ரிலீஸ் செய்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.ஆனால் கடந்த 2000 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளிவந்தது அதிகம் வரவேற்பு பெறாத ‛தேவதூதன்’ படத்தை ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறாராம் பிரபல மலையாள இயக்குனர் சிபி மலயில் தாநாயகியாக ஜெயப்பிரதா நடித்திருந்தார். 4கே முறையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டுள்ள இந்த படத்தில் இருந்து கிட்டத்தட்ட 30 நிமிட காட்சிகளை வெட்டி உள்ளதாக இயக்குனர் சிபி மலயில் கூறியுள்ளார்.

தேவதூதன் படத்தை ரீ ரிலீஸ் செய்யும்படி ரசிகர்களிடமிருந்து கோரிக்கை வந்ததாகவும் அதே நேரம் ரசிகர்கள் விரும்பாத 30 நிமிட காட்சிகளை நீக்கி இருப்பதாகவும், முன்னை விட தற்போது படம் விறுவிறுப்பாக இருப்பதால் இந்த ரீ ரிலீஸில் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
தேவதூதன் படத்தில் நடித்திருந்த காமெடி நடிகர் ஜெகதீஷ் ஸ்ரீ குமார் காமெடி என்ற பெயரில் அடித்த கூத்துக்கள் ரசிகர்களின் பொறுமையை சோதித்தது எனவும் அனேகமாக அந்த காட்சிகளைத் தான் இயக்குனர் நீக்கி இருப்பார் என்றும் மலையாள ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.