டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.
நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் டிவி பற்றி பகிர்ந்துள்ளார்.
ஒரு காலத்தில் விஜய் டிவியில் டிடி இல்லாத ஷோவே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். ஆனால், இப்போதெல்லாம் டிவி பக்கமே இவர் வருவதில்லை. அதற்கு பதில் இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் என தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர், விஜய் டிவியில் இருந்து வெளியேறியது குறித்து ஒரு பேட்டியில், பேசியுள்ளார். அதில் அவர், மணிக்கணக்காக படப்பிடிப்பு நேரத்தில் நின்று கொண்டிருந்ததால் தனக்கு காலில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், பொதுவாக விஜய் டிவியில் தான் தொகுத்து வழங்காத நிகழ்ச்சியே இல்லை என்றோ சொல்லும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறேன்.
அப்போதெல்லாம் தொடர்ச்சியாக பல மணி நேரங்கள் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும், அப்போது முழுக்க முழுக்க தொகுப்பாளர்கள் நிற்க வேண்டும் அது எனக்கு மட்டுமல்ல தொகுப்பாளர்களாக இருக்கும் அனைவருக்கும் இதே மாதிரி நிலைமைதான். ஒரு கட்டத்தில் எனது உடல்நிலை சரியில்லாமல் போனதால் எனக்கு நிகழ்ச்சிகள் குறைய தொடங்கி விட்டது. ஒரு கட்டத்தில் நின்று கொண்டே அதிகப்படியான நேரம் ஆங்கரிங் செய்ததால் வாழ்க்கையில் பல விஷயங்களை இழந்து சக்கர நாற்காலியில் இருந்தேன். எனவேதான் விஜய் டிவியிலிருந்து வெளியேறினேன் என டிடி தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் இருந்து விலகி, கமல் ஹாசன், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் இசை வெளியீட்டு விழாவை நடத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கே எனக்கு ஒரு ஸ்டூல் தந்து அதில் நான் உட்கார்ந்து இருந்தேன் என்றும், எல்லா தொகுப்பாளருக்கும் இது போன்று ஸ்டூல் கொடுத்தால் நல்ல இருக்கும் என்று டிடி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை பேச தொகுப்பாளர் பலரும் தயங்கி வந்த நிலையில், டிடி ஓபன்னாக பேசியதை பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பல ஆண்டுகளாக விஜய் டிவியில் வேலை செய்த எனக்கு இப்போது ஒரு நிகழ்ச்சியை கூட தொகுத்து வழங்க முடியவில்லை என்றும், இனி சினிமாவில் முழு கவனம் செலுத்த போகிறேன் எனவும், நான் நன்றாக இருக்கும் போது பலர் நம்மை பயன்படுத்தி இருந்தாலும், நமக்கு ஒரு என்று பிரச்சனைகள் வரும்போது சிலர் எல்லாம் கண்டு கொள்வதில்லை என்று டிடி தெரிவித்துள்ளார்.
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
This website uses cookies.