கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.
இதனிடையே, தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.
பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தனுஷ்சை பிரிந்த பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து லால்சலாம் படத்தை இயக்கி உள்ளார்.
இந்நிலையில், பிரிந்து வாழ்ந்து வந்தாலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே ஒரு விஷயத்தில் போட்டு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயன்றுவருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்நிலையில், பத்திரிக்கையாளராகவும், நடிகராகவும் திகழ்ந்துவரும் பயில்வான் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் விவகாரம் குறித்து பேசியுள்ளார். அதில், ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிந்து வாழ்கிறார்களே தவிர அவர்களுக்குள் இதுவரை விவாகரத்துக்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை என்றும், இதை ரஜினிகாந்த் விரும்பவில்லை என்பதால் பிரிந்து வாழ்ந்தால் பரவாயில்லை விவாகரத்து வரை செல்ல வேண்டாம் என்பது ரஜினிகாந்தின் நிபந்தனை என்றும், இந்த விஷயத்தில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாகவும், யாத்ரா மற்றும் லிங்கா அம்மா மீது வைத்திருக்கும் அதே பாசத்தை போலவே அப்பா மீதும் பாசம் வைத்துள்ளார்கள்.
சமீபத்தில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தனுஷ் மகன்களை அழைத்து சென்றார். அதேபோல் பொங்கல் அன்றும் தனுஷ் வீட்டிற்கு குழந்தைகள் சென்று வந்தனர். ஜானி மாஸ்டரை வைத்து இசை ஆல்பம் இயக்கிய ஐஸ்வர்யாவிற்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல், லால் சலாம் படத்தின் வெற்றிக்காகவும் வாழ்த்து தெரிவித்திருந்தார். தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவுடன் இணைந்து வாழ தூது விடுகிறார். ஆனால், ஐஸ்வர்யாவிடமிருந்து எந்த பதிலும் தற்போது வரை வரவில்லை, வரலாம், வர வேண்டும் என பயில்வான் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.