யோகி பாபுவின் திறமை பார்த்து வியந்த தோனி… சென்னை சூப்பர் கிங்ஸில் வாய்ப்பு!

Author: Shree
11 July 2023, 9:53 am

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு, ரஜினி, சிவகார்த்திகேயன், விஜய் என பல முன்னணி நடிகர்களிடன் படங்களில் நடித்திருக்கிறார். இவர் சிறந்த காமெடி நடிகர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த விளையாட்டு வீரர் என்பது சில படங்களில் கூட வெளிப்படுத்தியிருப்பார்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் தோணி தயாரிப்பில் உருவாகி வரும் LGM படத்தில் யோகி பாபு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க அவருக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும் நடிகை நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நேற்று படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி கலந்துக்கொண்டனர். அப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாவனா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராயுடு ஓய்வு பெற்றுவிட்டதால் அவருக்கு பதிலாக யோகிபாபுவை சேர்த்துக் கொள்வீர்களா ? என கேட்டார்.

அதற்கு பதிலளித்த தோனி, “யோகிபாபுவுக்கு கிரிக்கெட்டின் மீது ஆர்வம் இருக்கிறது என எனக்கு தெரியும். அவருக்காக சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் பேச நான் தயாராக இருக்கிறேன். ஆனால் ஒரு கண்டிஷன், யோகிபாபு மேட்ச் விளையாடவும், பயிற்சிக்கும் சரியாக கால்ஷீட் கொடுக்க வேண்டும்.

அதற்கு அவர் சம்மதித்தால் நான் அணி நிர்வாகத்திடம் பேச தயார்” என கூறினார். யோகிபாபு யோசிக்காமல் ஓகே சொல்லிவிட்டால் நிச்சயம் அடுத்த மேட்சில் களமிறங்கலாம். இப்படி ஒரு வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என எல்லோரும் வியந்து பாராட்டியுள்ளனர். மேலும் யோகி பாபுவுக்கு தோனி கையெழுத்து போட்ட பேட் ஒன்றையும் பரிசாக கொடுத்தார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!