கிரிக்கெட் வீரர் தோனி வரலாறு; ரசிகர்கள் கவனிக்காமல் விட்ட அற்புத தருணங்கள்;..
Author: Sudha7 July 2024, 6:08 pm
எம் எஸ் தோனி:தி அன் டோல்ட் ஸ்டோரி 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்
திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள சுவாரசியமான தகவல்கள் இதோ..
1.தோனிக்கு பிடித்த எண் 7, திரைப்படத்தில் அவர் இரண்டு வெவ்வேறு ஹோட்டல்களில் தங்குவதாக காட்டப்படும். ஹோட்டல்களின் அறை எண் 601 மற்றும் 304 இதன் கூட்டுத்தொகை ஏழு
2. பூஸ்ட் விளம்பரத்தில் தோனியுடன் நடித்த சிறுவன் பெயர் ஜீஷன். திரைப்படத்தில் சிறு வயது தோனியாகவும் தோன்றியவர் ஜீஷன்.
3. டிரைலரில் காட்டப்பட்ட பள்ளி உண்மையில் தோனி படித்த அதே பள்ளி மற்றும் வகுப்பறையில் காட்டப்பட்ட ஆசிரியர் அவருடைய ஆங்கில ஆசிரியர்
4. இந்த திரைப்படத்தில் தோனியின் முன்னாள் காதலி பிரியங்கா ஜாவாக நடித்தவர் திஷா பதானி.தோனியின் முன்னாள் காதலி விபத்தில் காலமானார்.
5. தோனி திரைப்படம் 2015ல் வெளியிட திட்டமிடப்பட்டது ஆனால் சில திருத்தங்கள் மற்றும் நிதி சிக்கல்கள் காரணமாக ஒரு வருடம் தாமதமாக திரையிடப்பட்டது.
6. பங்களாதேஷ் அணிக்கு எதிரான தோனியின் ரன் அவுட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு இதுவே தாமதத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.
7. தோனியின் நல்ல நண்பனான ஜான் ஆபிரகாம் யுவராஜ் சிங் கதாபாத்திரத்திலும் ராம்சரண் தேஜா சுரேஷ் ரெய்னாவாகவும், நடித்திருந்தனர்.
8. இந்த படத்தின் பட்ஜெட் 80 கோடி. கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனிக்கு 40 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அவர் அந்த பணத்தை சாரிட்டிக்கு வழங்கியதாக தெரிவித்தார்.
9. இயக்குனர் நீரஜ் பாண்டே மற்றும் குழுவினர் பிசிசிஐ யிடம் தோனியின் கிரிக்கெட் போட்டி காட்சிகளை பயன்படுத்த அனுமதி கோரினார். பிசிசிஐ 15 கோடி ரூபாய் கேட்டது.திரைப்பட தயாரிப்பாளர்கள் இவ்வளவு பெரிய தொகையை தர மறுத்து விட்டனர் பிறகு அது பேச்சு வார்த்தைகளின் மூலம் சரிசெய்யப்பட்டது.