கிரிக்கெட் தல பிறந்த நாள்; வந்து நின்ற பாலிவுட் ஹீரோ; தீயாய் பரவும் வீடியோ…

Author: Sudha
8 July 2024, 8:45 am

கிரிக்கெட்டின் தல என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தோனி. இவர் தன்னுடைய 43 வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

இரவு 12 மணிக்கு பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்திருந்தார் தோனியின் மனைவி சாக்ஷி.

தோனியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் கலந்து கொண்ட வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கேட் வெட்டியதும் முதலில் சக்ஷிக்கு ஊட்டி விட சொல்கிறார் சல்மான் கான்.அதன் பிறகு சல்மான்கானுக்கு கேக் ஊட்டி விடுகிறார்.கேக் வெட்டியதும் சாக்ஷி தோனி காலில் விழுந்து ஆசி பெற்றார்.

தோனி பிறந்தநாள் விழாவில் சல்மான் கான் கலந்து கொண்டதால் தாங்க் யூ சல்மான் பாப் என தோனி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தோனி:தி அன்டோல்ட் ஸ்டோரி மீண்டும் உலகெங்கும் உள்ள 50 திரையரங்குகளில் கடந்த 5 ஆம் தேதி திரையிடப்பட்டது.வருகிற 11 ஆம் தேதி வரை ரசிகர்கள் படத்தை பார்த்து ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?