துருவ் விக்ரமுடன் டேட்டிங் சென்ற அனுபமா? இணையத்தை அதிரவைத்த அந்தரங்க புகைப்படம்…
Author: Prasad14 April 2025, 3:46 pm
துருவ் விக்ரம் – அனுபமா ஜோடி…
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கபடியை மையமாக வைத்து உருவான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் லால், பசுபதி, ரஜிஸா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை பா.ரஞ்சித், சமீர் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
அந்தரங்க புகைப்படம்
இந்த நிலையில் துருவ் விக்ரமும் அனுபமா பரமேஸ்வரனும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துக்கொள்வது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் திடீரென வைரல் ஆகி வருகிறது. இருவரும் காதலித்து வருவதாகவும் அவர்கள் டேட்டிங் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது இணையத்தில் கசிந்துள்ளதாகவும் பலர் கூறுகின்றனர்.

“பிரேமம்” திரைப்படத்தில் நடித்தபோதே அனுபமா பரமேஸ்வரன் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டார். அதனை தொடர்ந்து தமிழில் “கொடி”, “தள்ளிப்போகாதே” போன்ற திரைப்படங்களில் நடித்த அனுபமா, “டிராகன்” திரைப்படத்தில் இளைஞர்களை சொக்க வைக்கும் பேரழியாக வலம் வந்தார். இதனை தொடர்ந்து அவர் “பைசன்” திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் துருவ் விக்ரமும் அனுபமாவும் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் வெளிவருகின்றன.
